எச்சரிக்கையை ஏற்றுக்கொள்வோம்
கருத்துகள்
ரதத்தை விட்டிறங்கி நெருங்கிய அவர், நண்பனாகவே பழகியவனின் கூரிய கத்திக்கு பலியானார். அவரது கச்சையில் அந்தக் கடிதம் அப்படியே திறக்கப்படாததாகவே இருந்தது. எச்சரிக்கையை பெற்றும் அதை அசட்டை செய்த ஒரு மாமன்னரின் பரிதாப நிலைமை இது! ஆம். இதைப்போல தேவன் தம்முடைய வேதாகமத்தின் மூலம் பல முக்கியமான இடங்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
இந்த எச்சரிக்கைகளை உடனே கேட்டு உணர்வடைந்தால் நாம் பாக்கியம் பெறுவது உறுதியாகும்.நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு வேதம் கொடுக்கும் எச்சரிக்கை: ‘‘நியாயத்திலே முகதாட்சண்யம் பாராமல் பெரியவனுக்குச் செவி கொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவி கொடுக்கக் கடவீர்கள். மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக (பயப்படாதிருங்கள்). நியாயத்தீர்ப்பு தேவனுடையது’’ (உபாகமம் 1: 17).
ராணுவ வீரர்கள், காவலர்களுக்கு வேதம் கொடுக்கும் எச்சரிக்கை: ‘‘நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும் பொய்யாய் குற்றஞ்சாட்டாமலும் உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்’’ (லூக்கா 3: 14).
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் வரி வசூலிப்பவர்களுக்கு வேதம் கொடுக்கும் எச்சரிக்கை: ‘‘நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே’’ (நீதிமொழிகள் 3: 27) மேலும் ‘‘உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதீர்கள்’’ (லூக்கா 3: 12).
மதுபானத்தை தயார் செய்பவர்களுக்கும் அந்த மதுபானத்தை வாங்கி குடிப்பவர்களுக்கும் வேதம் கொடுக்கும் எச்சரிக்கை: ‘‘சாராயத்தை
நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப் போகுமளவும் குடித்துக்கொண்டே இருக்கிறவர்களுக்கு ஐயோ!’’ (ஏசாயா 4:11).
தேவன் தமது வேதத்தின் மூலம் கொடுத்திருக்கிற இதுபோன்ற எச்சரிக்கைகளைக் கேட்டும் வாசித்தும் உணர்வடையாமலிருப்போமானால் நம்முடைய நிலைமை பரிதாபம். ‘‘பரிசுத்த ஆவியானவர் வந்த பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், உலகத்தை கண்டித்து உணர்த்துவார்’’ (யோவான் 16: 8) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்.
Thanks DINAKARAN
Aucun commentaire:
Enregistrer un commentaire
ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL