dimanche 24 février 2013

டிப்ஸ்

டிப்ஸ்:புளிக்க.... பொரிக்க.... சுவைக்க...


Kitchen Tips - Tips for Women
* வடை, முறுக்கு போன்ற பலகாரங்கள் செய்யும்போது எண்ணெயில் முதலில் கொய்யா இலையைப் போட்டு வறுத்து எடுங்கள். பிறகு, பலகாரங்கள் செய்து பாருங்கள். எண்ணெய் பொங்காது.
* ஒரே ஒரு துண்டு புடலங்காய் கிடந்தது. கறி சமைக்கக் காணாது என்பதால். அதைப் பொடியாக நறுக்கி வதக்கினேன். அத்துடன் 4 மிளகாய், சிறிது கடுகு வறுத்து உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினேன். ஆஹா.... துவையல் பிரமாதம்!
* குழாயில் பிடித்த தண்ணீர் கலங்கலாக இருக்கிறதா? ஒரு பக்கெட் தண்ணீருக்கு கால் டீஸ்பூன் துவரம் பருப்பை நைஸாக அரைத்து கலக்கினால் அது தெளிந்து விடும். சுவையும் மாறாது.
* குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்காமல் இருந்தால், மாவைக் கரைக்கும்போது ஒரு சிறு சாஷே "ஈனோ" சேருங்கள். மாவு நன்கு புளிக்கும். இட்லியும் மிருதுவாக இருக்கும்.
* வாங்கி வந்த காய்கறி, கீரை வகைகள் வாடி வதங்கி இருக்கிறதா? அவற்றை எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு எடுங்கள். அப்போதுதான் வாங்கியதுபோல ஃப்ரெஷ்ஷாக மாறிவிடும்.
* பிரியாணி இலையை, அலமாரிகளிலும், அடுப்படியிலும் போட்டு வையுங்கள். கரப்பான் பூச்சிகள் பக்கத்திலேயே நெருங்காது.
* வாழைக்காயைத் தோல் சிவி, சிப்ஸ் கட்டையில் சீவிய பிறகு, சூடான நீரில் சிறிது மஞ்சள் பொடியும், உப்பும் போட்டு சீவிய வாழைக்காயையும் கொட்டி மூன்று நிமிடம் மூடி வைக்கவும். பிறகு நீரை வடித்து வாழைக்காயைப் பிழிந்து முறத்தில் உதிர்த்து ஐந்து நிமிடம் உலரவிட்டபின் சிப்ஸ் செய்தால், வாழை சிப்ஸ் மொறுமொறுப்பாய் வருவதோடு சிக்கிரம் வெந்துவிடும். நேரமும் மிச்சமாகும்.
* பரோட்டா அல்லது நாண் செய்ய மாவு பிசையும்போது. குடிக்கிற சோடாவை தண்ணீருக்கு பதிலாக ஊற்றி பிசைந்து பாருங்கள்... பரோட்டா மிருதுவாக, பஞ்சுபோல மெத்து மெத்தென்று வரும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL