lundi 3 juin 2013

கனி கொடுத்து கனி பெறுவோம்




‘‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’’ என்று திருமணத் தம்பதிகளை வாழ்த்திப் பாடுவது வழக்கம். இங்கே பதினாறு என்பது குழந்தைகளை குறிக்கவில்லை. அவை,  பதினாறு வகை பேறுகளைக் குறிக்கின்றன. அவையாவன: ‘கலையாத கல்வி, குறையாத வயது, கபடு வராத நட்பு, குன்றாத இளமை, குறையாத வளமை, பிணி இல்லாத  உடல், சலியாத மனம், அன்பகலாத மனைவி, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடைகள் வராத கொடை, தொலையாத நிதி, கோணாத செங்கோல்,  துன்பமில்லாத வாழ்வு, இறைவன் பாதத்தில் அன்பு.’ இதுபோன்ற செல்வங்களை பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுமென்பது புதுமண தம்பதிகளுக்கு மாத்திரமல்ல;  எல்லாருக்குமே விருப்பம்தான்.

இந்த பதினாறு செல்வங்களையும் நாம் பெற விரும்பினால் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஆவியின் ஒன்பது கனிகள் நமக்கு தேவை. அவையாவன: ‘அன்பு (லிஷீஸ்மீ),  சந்தோஷம் (யிஷீஹ்), சமாதானம் (றிமீணீநீமீ),  நீடித்த பொறுமை (லிஷீஸீரீsஷீயீயீமீக்ஷீவீஸீரீ), தயவு (ரிவீஸீபீஸீமீss), நற்குணம் (நிஷீஷீபீஸீமீss). விசுவாசம்  (திணீவீtலீயீuறீஸீமீss),  சாந்தம் (நிமீஸீtமீறீஸீமீss), இச்சையடக்கம் (ஷிமீறீயீ சிஷீஸீtக்ஷீஷீறீ)’  (கலாத்தியர் 5:22, 23) நமது ஜீவியங்களில் நாம் ஆவியின்  கனியை கொடுக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே தேவன் கொடுக்கும் வெகுமதியின் நிறைவை நம்மால் பூரணமாய் அனுபவிக்க முடியும். வேதாகமத்தில் யோசேப்பு  என்னும் பக்தனை குறித்து வாசிக்கும்போது அவன் ‘கனி தரும் திராட்சை செடி’ என்று அவனுக்கு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம், அவனுக்குள் இந்த ஆவியின்  கனிகள் காணப்பட்டது (பாக்க ஆதி 49: 22). விருட்சங்கள் கனியைக் கொடுப்பது செழிப்புக்கும் நல் ஆரோக்கியத்துக்கும் அடையாளம்.

மரங்கள் கனி கொடுக்க வேண்டும். கனி கொடாத மரத்தினால் பயனேதுமில்லை. இதைப்போலவே மனிதர்களும் ஆவியின் கனிகளை கொடுக்க வேண்டும். இவை  இல்லாதிருந்தால் அந்த மனிதர்கள் வாழ்ந்தும் பயனேதுமில்லை. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத் 3:10). ஒரு மரம்  கொடுக்கும் கனிகளினால் அதன் தன்மையை அறியலாம். நல்ல மரம் நல்ல கனிகளை கொடுக்கும். கெட்ட கனிகளை கொடுக்காது (மத் 7:17). இதுபோலவே மனிதர்களின்  கிரியைகளை வைத்தே அவர் நல்ல மரமா? கெட்ட மரமா? என்று கணித்து விடலாம். நல்ல கனி கொடாத மனிதர்கள் இயேசு கிறிஸ்துவின் நியாயத் தீர்ப்பில் கணக்கு  ஒப்புவிக்க வேண்டும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நல்ல கனிகளை கொடுக்க வேண்டும். ஜெயம்  கொள்ளுகிறவனுக்கு தேவன் ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்கக் கொடுப்பார் (வெளி 2: 7).

- பரமன்குறிச்சி பெவிஸ்டன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL