mardi 9 juillet 2013

மின்வெட்டுக்கும், மின்கட்டணத்துக்கும் புதிய தீர்வு இன்வெர்ட்டர், சோலார்






மின்வெட்டு மற்றும் மின் கட்டண பிரச்னைகளை ஒரே நேரத்தில் சமாளிக்கும் வகையில் பிரபலமாகி வரும் சோலார் மின்சாரம் நடுத்தர வர்கத்தினரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. மின்தடையில் இருந்து தப்பிக்க ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் கடன் வாங்கியாவது இன்வெர்ட்டர் பொருத்தி வருகின்றனர். ஆனால், மின்சார இன்வெர்ட்டர் பயன்படுத்துபவர்களுக்கு மற்றொரு சிக்கலாக மின்சாரம் பயன்படுத்துவது அதிகரித்து கட்டணம் கூடுதலாக வருவது பிரச்னையாக உள்ளது.

இப்போது இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட புதிய வழியாக சோலார் இன்வெர்ட்டர் உள்ளது. இந்த இன்வெர்ட்டருடன் சோலார் பேனல்களை பண வசதிக்கு தகுந்தவாறு பொருத்தி தருகின்றனர். ஏற்கனவே மின் இன்வெர்ட்டர் வைத்திருப்பவர்களும் சோலார் பேனல் இன்வெர்ட்டராக மாற்ற முடியும் என்கிறார் நெல்லை தியாகராஜநகரை சேர்ந்த மாணிக்க வாசகம். அவர் மேலும் கூறியதாவது:

சோலார் இன்வெர்ட்டரில் பேனல், பேட்டரி, இன்வெர்ட்டர் ஆகியவை வழங்கப்படும். முழுக்க முழுக்க சூரிய மின்சக்தியை பெறும் வசதி இதில் இருக்கிறது. சார்ஜ் கன்ட்ரோலர் கருவியை கூடுதலாக வாங்கி இணைத்துக் கொண்டால் மின்சாதனங்களுக்கு எந்த நேரத்திலும் சோலார் மூலம் மட்டுமே மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.
எப்போதாவது சோலார் மின்சக்தி குறைந்தால் தானாக மின்சாரத்திற்கு மாறும் பணியை சார்ஜ் கன்ட்ரோலர் மேற்கொள்ளும். இதன் காரணமாக மின்சார செலவு பல மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.

உதாரணமாக 2 ஆயிரத்து ரூ.500 மின்கட்டணம் வந்த ஒரு வீட்டுக்கு ரூ.850 வாட் சக்தி உடைய இன்வெர்ட்டருடன் 2 பேனல் சோலார் மின் சக்தியை இணைத்த பிறகு மின் கட்டணம் 750 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் விபரம் அறிந்தவர்கள் இப்போது சோலார் மின்சக்திக்கு மாறி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
சோலார் இன்வெர்ட்டருக்கான பேனல் ஒன்றின் மதிப்பு 15 ஆயிரம். இதற்கு அரசு மானியமாக 30 சதவீதம் வழங்கப்படுகிறது. இதனால் 10,500க்கு கிடைக்கும். இதுதவிர சில நிறுவனங்கள் சிறப்பு அறிமுக சலுகையாக ரூ.550 வரை வழங்குகின்றன.

குழந்தைகளுக்கு கோடை பயிற்சி
நகர்ப்புற மக்களிடம் அதிகரிப்பு

நகரப் பகுதிகளில் கோடைக்கால சிறப்பு பயிற்சிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நாட்டம் குறித்து அசோசேம் அமைப்பு ஆய்வு நடத்தியது. டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகள், மும்பை, பெங்களூர், அகமதாபாத், கொச்சி, கொல்கத்தா, ஐதராபாத், சண்டீகர், டேராடூன் உள்ளிட்ட நகரங்களில் 3 ஆயிரம் பெற்றோர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அந்த ஆய்வு அறிக்கையை அமைப்பின் தலைமை செயலாளர் டி.எஸ்.ராவத் வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தாய், தந்தை இருவருமே பணியாற்றுவது, அதிகளவில் வருவாய் ஈட்டுவது, விழிப்புணர்வு அதிகரிப்பு போன்ற காரணங்களால் கோடைக்கால சிறப்பு பயிற்சிகள் அதிகரித்து வருகின்றன. விடுமுறைகள், வார விடுமுறைகளை வீடுகளில் அல்லது வெளி இடங்களில் வேடிக்கையுடனும், படைப்பு ஆற்றலுடனும் கழிக்க பெற்றோர்களும், குழந்தைகளும் விரும்புகின்றனர். எனவே அடுத்த 5 ஆண்டுகளில் இந்த துறை அதிக வளர்ச்சி பெறும்.

கோடைக்கால சிறப்பு பயிற்சிக்காக பெற்றோர்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை செலவு செய்ய தயாராக உள்ளனர். படம் வரைதல், நடனம், களிமண் மூலம் கலை பொருட்களை செய்தல், சமையல் திறன், விளையாட்டு போன்ற பயிற்சிகளை தங்கள் குழந்தைகளுக்கு வழங்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது உள்ள போட்டி நிறைந்த உலகை சமாளிக்கும் திறனை குழந்தைகள் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

5ல் ஒரு பெற்றோர், தங்கள் குழந்தை விடுமுறையை பொழுதுபோக்காக கலைகளை கற்பதிலும், கோடைக்கால முகாம்களிலும் கழிக்க விரும்புகின்றனர். இருவரில் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகள் வீட்டிலேயே அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகின்றனர். பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து தாங்களும் சிறப்பு பயிற்சிகளை பெற விரும்புகின்றனர். தங்கள் காலத்தில் இதுபோன்ற பயிற்சியெல்லாம் கிடையாது என்று 72 சதவீத பெற்றோர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதிக்கு ஏற்ற பேக்கேஜ்

சோலார் இன்வெர்ட்டரில் வசதிக்கு ஏற்ப 5 வித பேக்கேஜ் கிடைக்கிறது. ஹோம் மினி பேக்கேஜில் 1 பேன், ஒரு டியூப், 4 சிஎப்எல் பல்ப் ஆகியவற்றை குறைந்தபட்சம் 6 மணி நேரம் பயன்படுத்த முடியும். இதில் சோலார் பேனல் ஒன்றுடன், 100 ஏஎச் பேட்டரி, 600 வாட் இன்வெர்ட்டர் ஆகியவை அடங்கும். 25 ஆயிரம், 35 ஆயிரம், 75 ஆயிரம், 1 லட்சத்து 10 ஆயிரம் என சோலார் பேனர்ல் எண்ணிக்கைக்கு ஏற்ப விலை உள்ளது.

35 ஆயிரம் பேக்கேஜில் 2 சோலார் ஹைபவர் பேனல், 150 ஏஎச் பேட்டரி, 850 வாட் இன்வெர்ட்டர் ஆகியவை அடங்கும். இதன் மூலம் மின்சாரம் இல்லாமலேயே குறைந்த பட்சம் 6 மணி நேரத்திற்கு ஒரு டிவி, 2 பேன், 6 டியூப்லைட், 4 சிஎப்எல் பல்ப் ஆகியவற்றை பயன்டுத்தலாம்.

இவை அனைத்தையும் நிறுத்திவிட்டு கம்ப்யூட்டர், கிரைண்டர், மிக்சியில் ஏதாவது ஒன்றை பயன்படுத்த முடியும். இவைகளின் மின்சக்தி திறனுக்கு ஏற்ப சார்ஜர் கன்ட்ரோலரை தனியாக வாங்கி பொருத்திக் கொள்ள வேண்டும். சார்ஜர் கன்ட்ரோலர் ஆயிரத்து 500 முதல் 12 ஆயிரம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL