jeudi 9 mai 2013

தவறுகளை உணர்ந்து கொள்வோம்




‘‘வானம் இறைவனின் மாட்சிமையை  வெளிப்படுத்துகிறது. வான்வெளி அவர் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. ஒவ்வொரு பகலும் அடுத்த   பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது. ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. அவற்றுக்குச் சொல்லுமில்லை,   பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. ஆயினும் அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உல கின்  கடையெல்லை வரை எட்டுகிறது. இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது  வருகிறது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது.

அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது;  அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது. அதன் வெப்பத்திற்கு மறைவானது  ஒன்றுமில்லை. ஆண்டவரின் திருச்சட்டம்  நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம்  அளிக்கி றது; ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை  ஒளிர் விக்கின்றன. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும்   நீதியானவை. அவை பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக விலை மிக்கவை; தேனிலும் தேனடையினின்று சிந்தும் தெளிதேனிலும் இனிமையானவை.

அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு. தம் தவறுகளை உணர்ந்துகொள்பவர் யார்?  என் அறியாப்  பிழைக்காக என்னை மன்னியும். அப்பொழுது நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். என் கற்பாறையும் மீட்ப ருமான ஆண்டவரே!  என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட் டும்’’ (திருப்பாடல்கள் 19: 1-14).
நம் இதயத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து எத்தகைய வார்த்தைகளை நாம் அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறோமோ அவற்றைப் பொறுத்து  நம் வாழ்வை  நாம் யார் யாருடன் கழிக்க வேண்டுமென்று இறைவன் விதித்திருக்கிறாரோ அவர்களுடன் நாம் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் பொறுத்தே,  தெய்வீக அளவுகோல்கள் நம்மை மதிப்பிடுகின்றன.

எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை முறை ஜெப மாலை ஜெபிக்கப்பட்டது, எத்தனை முறை வாடா விளக்குகள் ஏற்றப்பட்டன, எத்தனை  முறை திருவிவிலிய வாசகங்கள் வாசிக்கப்பட்டன என்பனவற் றால் நம் மனங்களின் செயல்களை தெய்வீக அளவுகோல் மதிப்பிடுவதில்லை. ஜெபமாலை உருட்டுவதும் திருவிவிலிய வாசகங்கள் வாசிப்பதும் நம் கடமையாக இருக்கலாம். இவற்றைக் கடைப்பிடிக்கும் நாம் உண்மையிலேயே  பிறர்  சிநேகம் கொண்டவர்களாகவும் உறவு முறைகளோடு நல்லுறவை வளர்த்துக் கொள்பவராகவும் நம்மோடு ஒன்றி வாழும் நெஞ்சங்களை ஏற்றுக்  கொள்பவர்களாகவும் நம் மக்களை ரத்த உறவாக வாழ அனுமதிப்பவர்களாகவும் நாம் நம் மனத்தைத் திறந்து அனைவரோடும் ஒன்றிணைந்து வாழ   முயற்சித்திருக்கிறோமா?

நம் பகை நம்மோடு. அதை ஏன் நம் மக்கள் முன் வெளிப்படுத்தி, அவர்களையும் உறவுகளோடு ஒட்டி உறவாட விடாமல்  வெட்டி விடுகிறோம்? நம் சுயநலம்  பெரிதா? நம் மறைவிற்குப் பின் நிகழும் உறவுகளின் விரிசல், ஒட்டுறவு இல்லாமை, குடும்பப் பின்னணி, பாசப்  பிணைப்பு, ரத்த பந்தம் இவை அறுந்துபோக  நாம் உந்துகோலாய் இருக்கக் காரணமாய் இருந்தோம் என்ற பழி நம்மீது சுமத்தப்பட அனுமதிக்க லாமா? ஆகவே, நாம் பிளவிற்கு வித்திடாமல், நமக்கு ஏற்பட்ட  கசப்பான அனுபவங்களை நம் பிள்ளைகளிடமும் வெளிப்படுத்தி, உறவுமுறைகளுக்கி டையே விரிசல்களை உண்டுபண்ணாதிருப்போம்.

நம் சந்ததிகளுக்கு உண்மையான, நேர்மையான வழிகளையே காட்டுவோம். அப்படிக் காட்ட முடியாவிடின் அவர்கள் செல்லும் பாதைக்கே விட்டு  விடுவோம்.  அவர்களும் சிந்திக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி நல்லவையாகவும் சிறந்தவையாகும், முற்போக் குக்கு உரியவையாகவும்  இருக்கக்கூடும். நம் மிரட்டலுக்கும் அதட்டலுக்கும் பயந்தே அவர்கள் நல்ல முடிவெடுப்பதைத் தவிர்த்திருக்கலாம். எல்லாம்  நம் சுயநலத்தின் விளைவால்  ஏற்படுபவையே. இந்த சுயநலப் போக்கின் தன்மை எத்தனை காலம் நீடிக்கும் என்று  நாம் எண்ணுகிறோமா? நம்  காலத்தில் நாம் வல்லவர்கள்; நாம்  நினைத்ததை சாதிக்கக்கூடியவர்கள் என்ற இறுமாப்புடன் அலையலாம். நமக்கான  ஓதுவார்களை அமர்த்திக்  கொள்ளலாம்.

மடச்சாம்பிராணிகளை பக்கத்தில் வைத்து புகை மூட்டம் போட்டுக்கொண்டிருக்கலாம். அவர்கள் ஊதும் ஊதலில் புகை மண்டலம் வான்  மட்டும் எட்டலாம்!  ஆனாலும் நமக்குப் பின்னால் நின்று உதபுவர்களை, உதவியவர்களை உதறித் தள்ளி  உதாசீனப்படுத்தும் நம் மனப்போக்கு சரி யானதா, நேர்மையானதா  என்பதை நாம் சிந்திப்போம். மல்லாந்து படுத்திருக்கும் நாம் நம் எதிரியைக் காரி உமிழும்போது நம் எச்சில் நம்மீதே வி ழும் என்பதை மறந்துவிடாதிருப்போம்.
தன் ஆடுகளை கடலோரம் அமைந்திருந்த தோப்பில் விட்டு மேய்த்துக் கொண்டிருந்தான் அவன். கடலோ அமைதியாக இருந்தது. அப்பொறுமை மிகுந்த கடல்  மேல் சென்று பெரும் பொருள் ஈட்டக் கருதி ஆடுகளை விற்றான். கூடை கூடையாக பேரீச்சம்பழம் வாங்கிக் கப்பலில் ஏற்றிப்  பயணமானான்.

திடீரென்று சூறாவளி தோன்றியது. கப்பல் அலைக்கழிக்கப்பட்டது. பேரீச்சம் பழங்களை வாரிக் கடலுக்குள் வீசினான். காலிக் கப்ப லோடு கரை வந்து சேர்ந்தான்  ‘‘பொறுமை நடுவில் புயல் குடியிருக்கும்’’ என்பதைத் தெரிந்து கொண்டான். எந்த இயற்கை விளைவுக்கும் தான் தயா ராக இருந்தால்தான் தன் கடல்  பயணமும் அதைத் தொடர்ந்து தன் வணிகமும் சிறக்கும் என்பதை அவன் புரிந்துகொள்ளவில்லை. சில நாட்கள் சென்றன. அவன் கடலோரமாகக்  கூலிக்காரனாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அன்று கடலில் என்றுமில்லாத அமைதி நிலவியது. எதிரே வந்தவரிடம் ‘‘இக்கடலுக்கு மறுபடியும்  பேரீச்சம்பழம் தேவை போலும்; ஆதலால்தான் அமைதியாகக் காட்சி அளிக்கிறது.

ஆனால், கொடுப்ப தற்கு என்னிடம் ஒன்றும் இல்லை’’ என்று கடலைத் திட்டினான். ஆனால், கடலின் புயல்போன்ற தன் செய்கையால் தனக்குதான் நஷ்டம்  என்ப தையோ அதன் பொறுமை போன்ற நிதானம்தான் தனக்கு ஆதாயம் என்பதையோ அவன் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. அனுபவத்தால் பெறும்  அறிவே உறுதி வாய்ந்தது. வாழ்க்கையில் நிகழ்ந்த ஏமாற்றங்கள் நல்ல அனுபவங்களாக மாறுவதுண்டு. இத்தகைய அனுபவம்  வாய்ந்தவரே வாழ்க்கையை  எளிதாக நடத்திச் செல்ல வல்லவராவார். பிறர் தொழில் மீது மோகம் ஏற்படுவது இயல்பு. தன் தொழில் மீதும் வெறுப்புத்  தோன்றுவதும் இயல்பே.

Thanks DINAKARAN

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL