dimanche 31 mars 2013

‘‘எல்லாம் உம் விருப்பப்படியே நிகழட்டும்!’’

‘‘எல்லாம் உம் விருப்பப்படியே நிகழட்டும்!’’

கருத்துகள்

ஆண்டவர் இயேசு நம் பாவங்களையும் சாபங்களையும் தாமே சுமக்கவும் நம்மை அலகையின் பிடியிலிருந்து விடுவித்து சுதந்திரம் பெற்றவர்களாக,  இறை மக்களாக விண்ணக நிலை வாழ்விற்கு அழைத்துச் செல்லவும்தான் விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்து மனிதனாகப் பிறந்தார். நாம் நிறை வான வாழ்வு பெறும் பொருட்டு ஆண்டவர் இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் தம்மையே நமக்காகப் பூரணமாகக் கையளித்தார். அவர் செய்த தைப் போலவே நாமும் செய்ய வேண்டும். இயேசு தமது உடலை நமக்கு உணவாகவும் ரத்தத்தைப் பானமாகவும் தந்தார்.

தாம் படப்போகும் அவ மானங்கள், அடி, உதை, காயங்கள், ரத்தம் சிந்துதல், சிலுவையில் அறையப்பட்டு உயிரைக் கையளிப்பது இவைதான் இறைமகனின் வேதனைகள்;  ஆழ்துயரத்தின் காரணம். ‘‘தந்தையே உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்’’ என்று வேண்டிய இயேசு,  ‘‘ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்’’ என்று கூறினார். அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத்  தோன்றி அவரைத் திடப்படுத்தினார்.

இயேசு தாம் மரிப்பதற்கு முன்தின இரவு பட்ட  பதினைந்து மறைமுக சித்திரவதைகளைப் பற்றி அவர் கூறியவை: இந்த பூமியில் மிகவும் இழிவானவன் என்று என்னை யூதர்கள் கருதினார்கள். அதனால்,அவர்கள் என் இரு கால்களையும் ஒரு கயிற்றினால் கட்டி, மாடிப் படிக்கட்டுகள் வழியாக என்னைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு மிகவும் அசுத் தமான குமட்டல் வரக்கூடிய அறைக்குள் சென்றார்கள்.

என் ஆடைகளைக் களைந்து என் உடல் முழுவதிலும் இரும்புச் சாட்டையால் அடித்தார்கள்.

என் உடலை ஒரு கயிற்றினால் கட்டி தரையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு இழுத்தார்கள்.

ஒரு மரத்துண்டின் மீது ஒரு சுறுக்கு முடிச்சில், அந்த முடிச்சு அவிழ்ந்து நான் கீழே விழும்படி என்னைக் கட்டித் தொங்கவிட்டார்கள்.  இந்தச் சித்திரவதையைத் தாங்க முடியாமல் நான் ரத்தக் கண்ணீர் வடித்தேன்.

என்னை ஒரு மரக்கம்பத்தில் கட்டி என் உடலைத் துளைத்தார்கள்.

என்னைக் கற்களால் அடித்தும் எரியும் தீப்பந்தங்களால் சுட்டெரிக்கவும் செய்தார்கள்.

என்னைக் குத்தூசிகளால் துளைத்தார்கள். என் தோல், சதை மற்றும் ரத்தக் குழாய்களைக் கூரிய ஈட்டிகளால் குத்திக் கிழித்தார்கள்.

ஒரு கம்பத்தில் என்னைக் கட்டி வெறும் கால்களோடு, நெருப்பாய் தகதகத்த ஒரு உலோகத் தகட்டின் மேல் நிற்கச் செய்தார்கள்.

ஓர் இரும்பு மகுடத்தை என் தலைக்குச் சூட்டி, மிக மிக அசுத்தமான ஒரு துணியால் என் கண்களைக் கட்டினார்கள்.

கூர்மையான ஆணிகள் நிறைந்த ஒரு நாற்காலியின் மீது என்னை உட்காரச் செய்து என் உடல் முழுவதும் ஆறாத காயங்களை  ஏற்படுத்தினார்கள்.

என் காயங்களில் ஈயத்தையும் பிசினையும் ஊற்றினார்கள். அதன் பிறகு ஆணிகள் நிறைந்த நாற்காலியில் என்னை அழுத்தினார்கள்.  அப்போது அந்த ஆணிகள் என் சதையைத் துளைத்துக் கொண்டு இன்னும் ஆழமாக உள்ளே சென்றன.

எனக்கு மிகுந்த அவமானமும் வேதனையும் உண்டாகும்படி என்னுடைய பிடுங்கி எறியப்பட்ட தாடி மயிர்க்கால்களின் துவாரங்களில்  ஊசிகளால் குத்தினார்கள். பின்பு என் இரு கைகளையும் என் முதுகின் பின்புறம் கட்டி சிறையின் வெளியே என்னை அடித்தும் உதைத்தும் இழுத்துச்  சென்றார்கள்.

என்னை ஒரு சிலுவையின் மீது தூக்கியெறிந்து நான் மூச்சுவிட திணறும்படி என்னை இறுக்கிச் சிலுவையுடன் சேர்த்துக் கட்டினார்கள்.

நான் சிலுவையில் பூமியின் மீது படுத்திருக்கும்போது என் மீது ஏறி மிதித்துச் சென்று என் மார்பைக் காயப்படுத்தினார்கள். பிறகு என் முள் முடியிலிருந்து ஒரு முள்ளை எடுத்து என் நாக்கின் உள்ளே குத்தினார்கள்.

மிகவும் அசுத்தமான கழிவுப் பொருட்களை என் வாயில் ஊற்றி, என்னை மிக மிக அருவறுப்பான மொழிகளால் தூற்றினார்கள். ‘‘எனக்கு ஆறுதல் அளிக்க யாராவது ஒருவரைத் தேடினேன்; ஆனால் யாரும் கிடைக்கவில்லை.’’ பின்பு இயேசு கூறியதாவது: ‘‘ஒவ்வொருவரும் இந்த  பதினைந்து வகை சித்திரவதைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். அவை ஒவ்வொன்றும் போற்றப்பட வேண்டும். யார் ஒருவர்  இந்தப் பாடுகளில் ஒன்றையேனும் மிகுந்த அன்போடு எனக்குக் காணிக்கையாக்கி, பக்தி விசுவாசத்தோடு நாள்தோறும் என்னை நினைக்கிறார்களோ  அவர்களுக்குத் தீர்ப்பு நாளன்று முடிவில்லாத மகிமையை சன்மானமாக அளிப்பேன்’’ என்கிறார், இயேசு.

‘‘அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகாது என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்து விடுமாறு  யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக் கொண்டார்கள். ஆகவே படை வீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறைப்பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை  முதலில் முறித்தார்கள். பின்னர் மற்றவருடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கனவே இறந்து  போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.

ஆனால், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே  ரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என் பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். ‘எந்த எலும்பும் முறிவு படாது’ என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும், ‘தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவார் கள்’ என்னும் மறை நூல் கூறுகிறது. அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்.

யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக்  காட்டிக் கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போக பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான்.  யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு  வந்து சேர்ந்தார்.

அவர் வெள்ளைப் போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டு வந்தார். அவர்கள் இயேசுவின்  உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா  விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்’’ (யோவான் 19:  39-41).

கிறிஸ்துவின் ஆன்மாவே எம்மைப்
புனிதப்படுத்தும்
கிறிஸ்துவின் திருஉடலே எம்மை மீட்டருளும்
கிறிஸ்துவின் திரு ரத்தமே எம்மை
நிறைவித்தருளும்
கிறிஸ்துவின் விலாவினின்று வழிந்த
திரு நீரே எம்மைக் கழுவியருளும்
கிறிஸ்துவின் திருப்பாடுகளே எம்மைத் திடப்படுத்தியருளும்
உமது திருக்காயங்களுக்குள்ளே எம்மை
மறைத்தருளும்
உம்மை விட்டு எம்மைப் பிரிய விடாதேயும்!


-‘மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Thanks DINAKARAN

jeudi 28 mars 2013

உண்மையை ஆண்டவர் நம் இதயத்திலே வைத்துள்ளார்


கருத்துகள்

பிலாத்து, தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான். அவர்களை நோக்கி, “மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்கள். இதோ நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை. ஆகவே அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனை தண்டித்து விடுதலை செய்வேன்’’ என்றான். விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.

திரண்டிருந்த மக்கள் அனைவரும், “இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்’’ என்று கத்தினர். நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடு பட்டுக் கொலை செய்ததற்காக பரபா சிறையிலிடப்பட்டவன். பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப்  பேசினான். ஆனால், அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்... சிலுவையில் அறையும்...’’ என்று கத்தினார்கள். மூன்றாம் முறையாக அவன்  அவர்களை நோக்கி, “இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே, இவனைத்  தண்டித்து விடுதலை செய்வேன்’’ என்றான்.

அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்தக் குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது. அவர்கள் கேட் டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அவன்  விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படியே செய்ய விட்டுவிட்டான். அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது  சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல் வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலு வையை வைத்து அவருக்குப்பின்  அதைச் சுமந்துகொண்டு போகச் செய்தார்கள்.

பெருந்திரளான மக்களும், அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழ வேண்டாம்,  மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். பச்சை மரத்துக்கு இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்டமரத்துக்கு என்னதான்  செய்ய மாட்டார்கள்’’ என்றார் (லூக்கா 23: 12-31). ஆண்டவர் இயேசுவிற்குத் தமது வானகத் தந்தையிடமிருந்த அன்பில் ஆர்வம் இருந்தது. அதனால்தான் அவர் வெளிப்படையாய் மறைத்தூது பணியின் போது பின்வருமாறு கூறினார். “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை  அனுப்பியுள்ளார்’’ எம்மாவு சென்ற சீடர்கள் இயேசுவை அறிந்து உணரவில்லை. ஆனால், அவர் அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, பிட்டு  அவர்களுக்குக் கொடுத்தபோது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். அடையாளம் கண்டுகொள்ள  வேண்டிய உண்மையை ஆண்டவர் நம் இதயத்திலே வைத்துள்ளார். அந்த உண்மைதான் இயேசு கிறிஸ்து.

“விண்வெளியே கேள்; மண்ணுலகே செவி கொடு; ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார். பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்; அவர்களோ  எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்கு தீனி போடும் இடத் தைத் தெரிந்து கொள்கின்றது. ஆனால், என் மக்களோ என்னைப் புரிந்துகொள்ளவில்லை. விண்வெளியையும் மண்ணுலகையும் சாட்சியாக வைத்து  ஆண்டவர் இறைவாக்கினர் வாயிலாகத் தமது மனவேதனை திரும்பி வருமாறு அழைக்கின்றார். பகுத்தறிவற்ற காளையும், கழுதையும் அறிய வேண் டியதை அறியும்போது பகுத்தறிவு உடையவனான மனிதன் அறிந்துகொள்ளாமல் இருப்பது முறையா?

உன்னை என் மக்களின் வரிசையிலே எவ்விதம் சேர்த்துக் கொள்வேன் என்றும், திரளான மக்களினங்களுக்கிடையே அழகான உரிமைச் சொத்தாகிய  இனிய நாட்டை உனக்கு எவ்விதம் தருவேன் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். என் தந்தை என என்னை அழைப்பாய் என்றும் என்னிடமிருந்து  விலகிச் செல்ல மாட்டாய் என்றும் எண்ணியிருந்தேன். நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண் தன் காதலனைக் கைவிடுவதுபோல நீயும் எனக்கு  நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய்’’ என்கிறார் ஆண்டவர். ஆண்டவர் தமது வேதனையை இறைவாக்கினரான எரேமியா வாயிலாக வெளிப்படுத்துகின்றார். மேலும் அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:

“நீ  அவர்களுக்குச் சொல்ல வேண்டியது, ஆண்டவர் கூறுவது இதுவே. விழுந்தவன் எழுவதில்லையா? பிரிந்து சென்றவன் திரும்பி வருவதில்லையா? ஏன்  இந்த எருசலேமின் மக்கள் என்றென்றைக்கும் என்னை விட்டு விலகிப் பொய்யைப் பற்றிக் கொண்டு நிற்கின்றார்கள்; ஏன் திரும்பி வர மறுக்கின் றார்கள்? நான் என்ன செய்துவிட்டேன்? என்று குறை கூறுகிறார்களேயன்றி எவருமே தம் தீச்செயலுக்காக வருந்தவில்லை. மனிதனுடைய வார்த்தைகளைக் காட்டிலும் இயேசுவின் வார்த்தைகள் மேலானது. மரியாள் தேவையான ஒன்றான இயேசுவைப் பற்றிக்கொண்டு ஆண்டவரின் பாதம் அமர்ந்திருந்தாள். மார்த்தாளோ பலப்பல காரியங்களைச் செய்வதில் ஆர்வமாய் இருந்தார்.

பல சூழ்நிலைகள் குறித்து கவலை இருக்கலாம். நம்மை விட்டு விலகாத நல்ல துணை இயேசு. தேவையானது இயேசுவின் திருப்பாதம். இறைவனுடைய பாதத்தில் வீழ்ந்து கிடக்க வேண் டும். இயேசுவைப் பற்றிக்கொள்ளும் போதுதான் மனதில் சமாதானம் வருகிறது. தம்மை மிகுதியாகப் பற்றிக் கொள்பவர்களுக்கு இயேசு பாதுகாப்பாய் இருப்பார். சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று” என்று அவரைப் பழித்து ரைத்தான். ஆனால், மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.

நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே’’என்று பதிலுரைத்தான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்’’ என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்’’ என்றார் (லூக்கா 23: 39-43).

'மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Thanks DINAKARAN

mercredi 27 mars 2013

சுறுசுறுப்பாயிருப்போம் எந்நாளும்!

சுறுசுறுப்பாயிருப்போம் எந்நாளும்!

கருத்துகள்
In Argentina, even the beer you dri...
MORE VIDEOS
உலகின் மிக பிரபலமான ஆங்கில பத்திரிகையான ‘டைம்’, ஒவ்வொரு ஆண்டும் உலகில் மிக பிரபலமாக செயல்பட்ட ஒருவரை தேர்ந்தெடுத்து  அவருக்கு அந்த வருடத்தின் ‘சிறந்த மனிதர்’ என்ற விருது கொடுத்து கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 1982ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர்  பட்டம் பெற்றவர் யார் தெரியுமா? ரோபோதான்! செயல் திறன் மிக்க இயந்திர மனிதனைத்தான் ‘டைம்’ பத்திரிகை தெரிவு செய்தது. அப்போதைய  இஸ்ரேலிய பிரதமர் பிகினையும், இங்கிலாந்து பிரதமர் தாட்சரையும், கணினி போட்டியில் தோற்கடித்து, ரோபோ முதல் இடத்தை பெற்றது.

தேவன் மற்ற எல்லா ஜீவராசிகளைவிட மனிதனை மிக சிறப்புள்ளவனாக படைத்தார். உலகை ஆளும்படியான அதிகாரத்தை வழங்கினார். எல் லாவற்றையும் மனிதர்கள் ஆளும்படிச் செய்தார். ஆனால், இன்றைய நவீன காலத்தில் மனிதன் செய்ய வேண்டிய பல காரியங்களை இயந்திர மனிதன் செய்து கொண்டிருக்கிறான். அறிவியல் படைப்புகளில் மிகவும் உன்னதமான, பாராட்டுகளுக்குரிய கண்டுபிடிப்பு இந்த இயந்திர மனிதன் என்று  சொல்லலாம். இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாய் அமைந்த தேவனுக்கு நாம் நிச்சயமாய் நன்றி சொல்ல வேண்டும்.

மனிதனுடைய இடத்தை ஒரு இயந்திர மனிதன் பிடித்திருக்கிறான். மனிதன் செய்யும் அத்தனை வேலைகளையும் மிக விரைவில் இந்த ரோபோக்கள்  செய்துவிடுகின்றது. இதனால் அநேக மனிதர்கள் சோம்பேறிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும்  மனிதர்கள் செய்ய வேண்டியதை செய்யத்தான் வேண்டும். இயந்திரங்களால் மனிதர் சோம்பேறிகளாக மாறிவிடக் கூடாது. “சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம். நீதிமானுடைய வழியோ ராஜா பாதை’’ (நீதி 15: 19) “வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். கதவு கீழ்முனையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.

சோம்பேறி தன் கையை கலத்தில் (உணவுத் தட்டில்) வைத்து அதைத் தன் வாய்க்குக் கொண்டு செல்லவும் வருத்தப்படுகிறான்’’ (நீதி 26: 13-15) எ ன்று வேதம் கூறுகிறது. மேலும் “சோம்பல், தூங்கி விழப்பண்ணும். அசதியானவன் பட்டினியாயிருப்பான்’’ (நீதி 19: 15), “மிகுந்த சோம்பலினால்  மேல் மச்சுப் பழுதாகும். கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுங்காகும்.’’ (பிர 10: 18). “சோம்பற் கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்’’ (நீதி  10: 4) - இதுபோன்ற ஏராளமான வசனங்கள் சோம்பேறிகளை பற்றி வேதம் எடுத்துரைக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் சோம்பலுக்கு இடங்கொடாதிருப்போம். சுறுசுறுப்பாய் வாழ கற்றுக்கொள்வோம். சுறுசுறுப்பாயிருந்தால் கர்த்தருக்குள் சுகமடையலாம்.

பரமன்குறிச்சி பெவிஸ்டன்


Thanks Dinakaran

jeudi 7 mars 2013

Tandoori Masala Powder

Tandoori Masala Powder

Tandoori masala is a mixture of spices specifically for use with a tandoor, or clay oven, in traditional north Indian, Pakistani and Afghan cooking. The specific spices vary somewhat from one region to another, but typically include garam masala, garlic, ginger, cumin, cayenne pepper, and other spices and additives (e.g. lemon juice …). The spices are often ground together with a pestle and mortar.
Tandoori Masala Powder Tandoori Masala Powder
Tandoori masala is used extensively with dishes as Tandoori chicken. In this dish, the chicken is covered with a mixture of plain yogurt and tandoori masala. The chicken is then roasted in the tandoor at very high heat. The chicken prepared in this fashion has a pink-colored exterior and a savory flavor.
Other chicken dishes, in addition to tandoori chicken, use this masala, such as tikka or butter chicken, most of them Punjabi dishes. It can be used with meat other than chicken, for example, in tandoori fish or paneer tikka.
If prepared yourself, the masala can be stored in airtight jars for up to 2 months. However, nowadays, packets or canisters of tandoori chicken masala are also readily available at major Indian supermarkets, with varying tastes depending on the brand. This convenience has led to many Indians and Pakistanis buying the masala rather than making it at home.

Ingredients

  • Coriander seeds, 2 Teaspoons
  • Cumin seeds, 1.5 Teaspoons
  • Turmeric powder, 1 Teaspoon
  • Garlic Powder, 2 Teaspoons
  • Ginger powder, 1 Teaspoon
  • Mango powder (amchoor), 1 Teaspoon
  • Paprika, 2 Teaspoons
  • Red Chili powder, 1 Teaspoon
  • Mint powder, 1 Teaspoon
How to make a Tandoori Masala Powder
  • Spray oil in a non-stick frying pan and roast coriander and cumin seeds till they turn aromatic.
  • Mix all the ingredients and grind into a fine powder using a grinder.
  • Store tandoori masala in a air-tight bottle and use tandoori masala powder spice when required.

lundi 4 mars 2013

உலகியல் சொத்து அனைத்துமே இறைவனூக்குரியது

உலகியல் சொத்து அனைத்துமே இறைவனூக்குரியது

கருத்துகள்

தவக்காலம்: 13.2.2013 முதல் 31.3.2013 வரை

அன்று ஆண்டவர் இயேசு நற்செய்தியைப் பறை சாற்றியபோது அவரிடம் வந்தவர்கள் நோயுற்றவர்களாகவும், பலவீனமானவர்களாகவும் இருந்தனர்.  அவர்கள் இயேசுவின் காலடியில் அமர்ந்து இறை வார்த்தையைக் கேட்டு இறை அன்பால் நிரம்பப் பெற்று மன அமைதியும், உடல்நலமும் பெற்றனர்.  அவர்கள் தூய ஆவியால் நிரப்பப் பெற்று, புதுப்படைப்பாயினர். இயேசுவின் வார்த்தையைக் கேட்ட அனைவருக்கும் இந்த இறை அனுபவம் ஏற்பட்டது.  பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருந்தவர்களுக்கு   இளைப்பாறுதல் தந்த நற்செய்தியைத்தான் ஆண்டவர் அறிவித்தார்.

ஆண்டவர் இயேசு குறைகளைப் பொருட்படுத்துவதில்லை. அவர் குறையை  நிறைவாக மாற்றுகின்றார். எனவே நாம் உலக சுகங்களைக் கைவிட்டு  இந்த தவக்காலத்தில் இயேசுவோடு சேர்ந்து நடந்து செல்வோம். பாவத்தைக் கைவிட்டு தூய்மை பெறுவோம். விண்ணகம் மகிழ்வதற்கான ஒரே  காரணம் பாவி மனம் மாறுவதுதான் என்று கற்பித்தவர், நம் ஆண்டவர். உண்மையான கடவுளான இயேசுவை விசுவாசிப்போம். அவர் கூறிய  மறைவார்த்தைகளின் நோக்கம் பாவியின் ஆன்மா தூய்மை பெற வேண்டும் என்பதற்காகத்தான். இறை மகன் இயேசு கிறிஸ்துவை உரிமைச் சொத் தாக்குவதாக இருக்கட்டும், நமது தவக்காலப் பயணம்.

அன்பால் அதிர்வுகளை ஏற்படுத்தி ஆச்சரியங்களை உண்டாக்கியவர் இயேசு. காலமும் இடமும் கடந்து எல்லையற்றுச் செல்கின்றன அவரது அன்பின்  அதிர்வுகள். இயேசுவின் அன்பின் அதிர்வுகள் வலுப்பெற்று இன்றும் மனுக்குலத்தைப் பிரமிக்க வைக்கின்றன. இயேசுவின் வாழ்வும் போதனையும்  இம்மண்ணிருக்கு மட்டும் மாந்தர் அனைவருக்கும் ஒளியும் வழியுமாக இருக்கும். ஏனெனில், இயேசுவே மனிதரின் வாழ்வும் மகிழ்வுமாகத் திகழ்கின் றார். இயேசுவை இழந்தவர் எதைப் பெற்றிருப்பினும் இகழ்ச்சிக்குரியவரே; அவர் ஒன்றுக்கும் உதவாதவரே.

இயேசு ஆயிரமாயிரம் விடியல்களுக்கு வித்திட்டவர். மனிதர்களை நேசிக்கச் சொன்ன மகான். அன்பை மனங்களில் தூவியவர். அன்புக்கு  இலக்கணமாய்த் திகழ்ந்தவர். அவர் இந்த உலகை, நமது உறவுகளை, உணர்வுகளை, ஏக்கங்களை, மனக்காயங்களை அறிந்தவர். அவர் வாழ்வின்  நுணுக்கங்களை, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை, ஏழைகளின் பரிதாப நிலைகளை உணர்ந்தவர். மக்களோடு மக்களாய் இணைந்து பழகியவர். அவர்கள்  துன்பத்தில் பங்கு கொண்டு துயரங்களைப் போக்கியவர். எனவே, அவரது போதனைகள் புரட்சியை ஏற்படுத்தின.

ஏழைகளை நேசித்த இயேசு அவர்களை ‘பேறு பெற்றோர்’ என்றார். வறுமையும், ஏழ்மையும் கடவுளின் தண்டனையாகவும், சாபமாகவும் கருதப்பட்ட  அந்நாட்களில், இயேசுவின் புதிய சிந்தனை அவர்களது வறண்ட இதயத்தில் வற்றாத நீரூற்றாகப் பொங்கிப் பெருக்கெடுத்தது. “உயர்ந்தவர் தாழ்த் தப்படுவார். தாழ்ந்தவர் உயர்த்தப்படுவார்’’ என்று கூறி நியதிகளையும், நியமனங்களையும் மாற்றினார். ‘யார் பெரியவன்’ என்று கேட்கும்  கேள்விகளுக்கு செல்வம், பதவி, ஆள்பலம், அதிகாரம் படைத்தோரையே எல்லோரும் சுட்டிக் காட்டுவர்.

ஆனால், அதை மாற்றி அமைத்து, நீங்கள் குழந்தைகள் ஆகாவிடில், உங்களையே தாழ்த்தாவிடில், உங்கள் பிடிவாதங்களைத் தளர்த்தாவிடில், உங்கள் தன்னலத்தைத் தகர்த்தெரியாவிடில்,  உடன் இருப்போருடன் ஒத்துப்போகாவிடில், நீங்கள் பெரியவராய், பெருந்தன்மையாளராய் இருக்க இயலாது. தொண்டு செய்பவரே, பலனை  எதிர்பார்க்காது பணி செய்பவரே பெரியவர் என்னும் புது இலக்கணம் தந்து, தமது வாழ்வையும் தொண்டாக மாற்றி உலகக் கோட்பாடுகளுக்கும்,  நடைமுறைகளுக்கும் சவுக்கடி தந்தவர். அவரது போதனையைக் கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் கற்பிப்பதைக் கேட்ட பலர் “இவருக்கு  இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்ட ஞானம்’’ என்று வியந்தனர்.

தமது போதனைகளில் பழிவாங்கும் தன்மையைப் பழிக்கிறார். தான் என்ற ஆணவம் வளராமல் அடக்குகிறார். அன்பையும் சமாதானத்தையும்  விதைக்கிறார். தீமையை அறுவடை செய்து மனக்களஞ்சியங்களில் சேர்த்து வைத்து தீயவராய்த் திரியாதீர் என்று திருத்துகிறார். எல்லாரிடமும் அன்பு  செய்யப் பணிக்கின்றார். பணிவையும், பாசத்தையும் பரிணமிக்கச் செய்யுங்கள் என்கிறார். அயலானை நேசித்து அன்பினால் அனைத்துத் தடைக¬ ளயும் தகர்த்தெறியுங்கள் என்கிறார்.
அளவற்ற இரக்கம் மற்றும் நன்மையின் உறைவிடமான இறைவன் மனிதரிடம் இடைவிடாது பரிவு காண்பிக்கின்றார். இறைவனைப் போல் மனிதர்  பிறருக்குச் செய்யும் நன்மைதான் தானதர்மங்கள். தானதர்மம் செய்வது சகோதர அன்பையும் இறை அன்பையும் குறிக்கின்றது.

“தம் கண் முன்னேயுள்ள சகோதர, சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.’’ (1 யோவான் 4: 20).  தானதர்மம் செய்வது நம்பிக்கையைச் செயலில் காண்பிப்பதாகும்.  பிறருக்கு இரக்கம் காண்பிக்கும்போது நாமும் இறை இரக்கத்திற்கு உரியவர்  ஆகிறோம். உன்மீது அன்பு கொள்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கொள்வாயாக என்ற இறைக்கட்டளையை நிறைவேறச் செய்வ துதான் தானதர்மம் செய்வது. இது இறை ஆசீருக்கு நன்றி செலுத்துவதும், ஆன்மிக வாழ்வுக்கான சேமிப்பும் ஆகும்.

நன்மையின் நிறைவில் வளர்ந்திட வேண்டுமென்றும் கடவுள் கட்டளையிட்டுள்ளார். இதற்கான சிறந்த வழிதான் தானதர்மங்கள். ஆண்டவர் இயேசு  ஆன்மிக வளர்ச்சிக்குத் தேவையாக மூன்று காரியங்களைக் கூறுகின்றார். அவை முறையே தர்மம் செய்தல், இறை வேண்டல் மற்றும் நோன்பு இருத் தல் ஆகும். தானதர்மம் செய்வது நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ளக் காரணமாகின்றது. தானதர்மம் செய்வது ஓர் அறச்செயல் மட்டுமல்ல. அது  இயேசுவை வறியோரிடம் கண்டு செய்யும் இறை ஊழியமுமாகும்.

தீமை செய்து அநியாயமாகப் பணம் ஈட்டுபவர்கள் தீமையின் கூலியான பணத்தை நன்மை செய்யப் பயன்படுத்துவதால் எப்பயனும் இல்லை.  நியாயமாக  ஈட்டிய செல்வத்தால் தானதர்மம் செய்தால்தான் பலனுண்டு. பலவிதமான அநியாய வழிகளில் பணம் சம்பாதித்து அதன் ஒரு பங்கைத்  தானம் செய்பவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். ஆனால், அப்பணத்தால்  அவனுக்கு எப்பயனும்  விளையவில்லை. அது அவனுடைய அழிவுக்குத்தான் காரணமாயிற்று.

“ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாராகில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’’ (மாற்கு
8:36).  இந்த வார்த்தைகள் நமது காதுகளில் அவ்வப்போது  ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். நிலையற்ற உலகம் இது என அறிந்தும்கூட  மனிதனின் ஆசைக்கு அளவில்லை. பணம், பதவி, பட்டம், புகழ், பெயர் இவற்றைப் பெறுவதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து செல்லத்  தயாராக உள்ளான். அதனை அடைய எதைச் செய்யவும் துணிந்து நிற்கிறான். பணமும், பதவியும் சேர்ந்துவிட்டால் மனிதனின் கண் பார்வை  மறைக்கப்படுகிறது. அகங்காரம், ஆணவம் எனும் அலகை தலைதூக்கி ஆடுகிறான்.

அலகையின் பிடியில் சிக்குண்ட இந்த மனிதனிடம் இயேசு கூறுகிறார்: “அறிவிலியே, சாவு உனக்கு நிச்சயம். சாவிற்குப் பின் விண்ணகத் தந்தை  உன்னை கணக்குக் கேட்கும்போது, நீ உனது அதிகார பலத்தால் குறுக்கு வழியில் சேர்த்து வைத்த சொத்துகளின் பட்டியலையா காண்பிக்கப்  போகிறாய்? எனவே, அறிவற்ற மனிதர் செய்வதுபோல் நிலத்தின் விளைச்சலை மிகுதியாக்கி அதனைச் சேகரித்து வைக்கத் திட்டமிடுவதைத் தவிர்த்து, நம்மிடம் செல்வம் இருந்தால் அதனை இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளப் பழகிட வேண்டும்.

அப்படிச்செய்தால் நமது உயிர் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்மால் வாழ்வு நடத்தும் மற்றவரிடம் நாம் தொடர்ந்து வாழ முடியும். அதோடு உலகின் செல்வம் அனைத்துமே இறைவன் சொத்து. அதை  நமதாக்கிச் சொந்தம் கொண்டாடுவது அழகல்ல. அது உலகிலுள்ள அனைவருக்காகவும் படைக்கப்பட்டது. அதை நாம் சேர்த்து வைத்துக்கொண்டால்  அது நமது விண்ணகப் பயணத்தைத் தடை செய்துவிடும். இறைக்காத கிணறு வறண்டு போவதுபோல, பகிர்ந்துகொள்ளாத மனமும் பாலைவனமாகி  விடும்.’’

-‘மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

samedi 2 mars 2013

இன்ஸ்டண்ட் பால் கோவா

சமையல்:இன்ஸ்டண்ட் பால் கோவா


Instant Milk Kova - Cooking Recipes in Tamil

பால்கோவான்னா பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க.. ஸ்வீட்லயே பால்கோவாவுக்கு இருக்கிற மவுசே தனிதான்.. அனைவரும் மிக விரும்பி சாப்பிடுவோம்.. குட்டீஸ்கள் திடீர் திடீர்னு கேட்டு அடம்பிடிப்பார்கள்.. அவர்களுக்காகவே இந்த உடனடி பால்கோவா.......

தேவையான பொருட்கள்:

கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் - 1 கப்
பால் பவுடர் -  1/4 கப்
கெட்டித் தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
(கன்டன்ஸ்ட் மில்க்கில் சுகர் இருப்பதால் அதுவே போதுமானது.. தனியாக சுகர் சேர்க்க தேவை இல்லை.)

செய்முறை:

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து, மைக்ரோவேவ் ஓவனில் ஒரு 4 - 6 நிமிடங்கள் வைக்கவும்.
இடை இடையே வெளியில் எடுத்து நன்கு கலந்து திரும்ப வைக்கவும்.
6 அல்லது 7 நிமிடங்களில்...சூடான...சுவையான... பால்கோவா தயார்..!!


கூடல் - Thursday, March 22, 2012

vendredi 1 mars 2013

மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?


International Women's Day 

International Women's Day 2012 - Tamil Katturaikal - General Articles




















மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும். முதலில் அனைத்து மகளிருக்கும் கூடலின் சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மார்ச் 8-ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8-ம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.

சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.
புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!
தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.

இந்த நிலையில்தான் 1857-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும், படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. இதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.

எது எப்படி இருந்தாலும், வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததேத் தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. (அது இன்று வரை பல இடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857-ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் அடக்கினர். வெற்றி பெற்றதாக பகல் கனவும் கண்டனர். ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்களுக்கு பலிக்கவில்லை.

அடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத் தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907-ம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.
இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பெண்களை அடக்கி ஆள நினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா அல்லது இந்த தீர்மானம் நிறைவேற வழி ஏற்படுத்துமா... பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.
இதற்கிடையே பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர். 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.
அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 91 ஆண்டுகளுக்கு முன்பு 1921-ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இந்த தினம் தங்களது குடும்பம், சமுதாயம், சமூகம், நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ள சாதாரண பெண்களின் முனைப்பை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாலின சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உலகை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும். மேலும், அனைத்து வகையிலும் பெண்களின் முன்னேற்றம் என்ற இலக்கை அடைவதில் நாம் கண்டுள்ள வெற்றிகளைக் கொண்டாட வேண்டிய தினமும் ஆகும் இது. அதே சமயம் பெண்கள் தொடர்பான அனைத்து வகை முன்னேற்றங்களிலும் குறிக்கோள்களை அடைந்ததை நினைவுபடுத்தவும், மாற்றத்துக்கு வழிகோலும் திட்டங்களை செயல்படுத்தவும் இந்த நாட்டின் விதியை சீரமைக்க ஓய்வில்லாமல் பாடுபடுங்கள்.