சுறுசுறுப்பாயிருப்போம் எந்நாளும்!
கருத்துகள்
In Argentina, even the beer you dri...
தேவன் மற்ற எல்லா ஜீவராசிகளைவிட மனிதனை மிக சிறப்புள்ளவனாக படைத்தார். உலகை ஆளும்படியான அதிகாரத்தை வழங்கினார். எல் லாவற்றையும் மனிதர்கள் ஆளும்படிச் செய்தார். ஆனால், இன்றைய நவீன காலத்தில் மனிதன் செய்ய வேண்டிய பல காரியங்களை இயந்திர மனிதன் செய்து கொண்டிருக்கிறான். அறிவியல் படைப்புகளில் மிகவும் உன்னதமான, பாராட்டுகளுக்குரிய கண்டுபிடிப்பு இந்த இயந்திர மனிதன் என்று சொல்லலாம். இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாய் அமைந்த தேவனுக்கு நாம் நிச்சயமாய் நன்றி சொல்ல வேண்டும்.
மனிதனுடைய இடத்தை ஒரு இயந்திர மனிதன் பிடித்திருக்கிறான். மனிதன் செய்யும் அத்தனை வேலைகளையும் மிக விரைவில் இந்த ரோபோக்கள் செய்துவிடுகின்றது. இதனால் அநேக மனிதர்கள் சோம்பேறிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதர்கள் செய்ய வேண்டியதை செய்யத்தான் வேண்டும். இயந்திரங்களால் மனிதர் சோம்பேறிகளாக மாறிவிடக் கூடாது. “சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம். நீதிமானுடைய வழியோ ராஜா பாதை’’ (நீதி 15: 19) “வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். கதவு கீழ்முனையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
சோம்பேறி தன் கையை கலத்தில் (உணவுத் தட்டில்) வைத்து அதைத் தன் வாய்க்குக் கொண்டு செல்லவும் வருத்தப்படுகிறான்’’ (நீதி 26: 13-15) எ ன்று வேதம் கூறுகிறது. மேலும் “சோம்பல், தூங்கி விழப்பண்ணும். அசதியானவன் பட்டினியாயிருப்பான்’’ (நீதி 19: 15), “மிகுந்த சோம்பலினால் மேல் மச்சுப் பழுதாகும். கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுங்காகும்.’’ (பிர 10: 18). “சோம்பற் கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்’’ (நீதி 10: 4) - இதுபோன்ற ஏராளமான வசனங்கள் சோம்பேறிகளை பற்றி வேதம் எடுத்துரைக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் சோம்பலுக்கு இடங்கொடாதிருப்போம். சுறுசுறுப்பாய் வாழ கற்றுக்கொள்வோம். சுறுசுறுப்பாயிருந்தால் கர்த்தருக்குள் சுகமடையலாம்.
பரமன்குறிச்சி பெவிஸ்டன்
Thanks Dinakaran
Aucun commentaire:
Enregistrer un commentaire
ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL