mercredi 15 janvier 2014

மலர்களே...மலர்களே...

மலர்களே...மலர்களே...

Flowers Flowers ... ...
Make your own Baked Taco shells
MORE VIDEOS
கண் கவரும் நிறம், கவர்ச்சியான தோற்றம், மனம் மயக்கும் மணம், மருத்துவ குணம் என்று இதிகாச காலம் தொட்டு இன்றைய கம்ப்யூட்டர் யுகம்  வரை மனித இனத்தை கவர்ந்திழுப்பதில் பூக்களுக்கு என்றுமே தனியிடம் உண்டு. மனிதனின் தேவையைக் கொண்டு பூஜைக்கான மலர்கள், தலையில்  சூடும் மலர்கள், மருத்துவ மலர்கள், உணவு மலர்கள், மாலைகளுக்கான மலர்கள், கொய் மலர்கள், உலர் மலர்கள், வாசனை எண்ணெய் மலர்கள்,  அலங்கார மலர்கள் என்று வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இருப்பினும், வீட்டுத் தோட்டத்தில் முதல் மூன்று வகைகளை மட்டுமே வளர்க்க  இயலும். மற்றவை வியாபார நோக்கிலேயே பெரிய அளவில் வளர்க்கப்படுகின்றன. வீட்டை பூஞ்சோலையாக மாற்ற வழி சொல்கிறார் தோட்டக்கலை  நிபுணர் பா.வின்சென்ட்.

பூஜைக்கான மலர்கள்


தலைமுறைகள் மாறினாலும் பரவலாக எல்லா வீட்டுத் தோட்டத்திலும் பூஜைக்கான மலர்கள் தனித்துவத்துடன் இருப்பதுண்டு. அரளி, செம்பருத்தி,  சங்கு புஷ்பம், மனோரஞ்சிதம், பாரிஜாதம், சம்பங்கி, ரோஜா, பவளமல்லி, சாமந்தி...

தலையில் சூடும் மலர்கள்

நவீன பெண்களிடம் தினமும் பூ சூடும் பழக்கம் குறைந்து வந்தாலும், விசேஷ நாட்களில் மல்லிகைப்பூ, ஜாதிப்பூ, பிச்சிப்பூ, முல்லைப்பூக்கள் தலையை  அலங்கரிப்பது மங்களகரம்தானே.குறிப்பாக விவாக முடிவுகள் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரங்களை மாற்றிக் கொள்வதில் உறுதி செய்யப்படுகின்றன.  மற்ற நாட்களில் ரோஜா, புதிய வகை செவ்வந்தி பூக்களை சூடுகிறார்கள்.

மருத்துவ மலர்கள்


சாதாரணமாக செம்பருத்திப் பூவை இதயத்துக்கு நல்லது என்று தினமும் சாப்பிடுபவர்கள் உண்டு. கண் நோய்களுக்கு நந்தியாவட்டை பூவினை  தண்ணீரில் சற்று நேரம் ஊற வைத்து கண்களில் வைப்பார்கள். ரோஜா இதழ்களினால் செய்யப்படும் குல்கந்து மருத்துவ குணமிக்கது. வடநாட்டுப்  பெண்கள் அசோக மலர்களை உண்பதை ஒரு நோன்பாக கடைப்பிடிக்கிறார்கள். கர்ப்பிணிகள் அதிக விலையாக இருந்தாலும் ஆரோக்கியம் கருதி  குங்குமப்பூவினை இரவில் பாலில் இட்டு அருந்துவார்கள். முருங்கைப்பூ, வாழைப்பூக்களும் மருத்துவ குணமிக்கவையே.

மாலைகளுக்கான மலர்களும் கொய் மலர்களும்


மாலைகள் அணிவது அல்லது அணிவிப்பது இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பாரம்பரிய மலர்களான சம்பங்கி, எட்வர்ட் ரோஸ்,  செண்டு மல்லி, செவந்தி போன்றவற்றின் சாகுபடி குறைந்து வருகிறது. மாறாக பொக்கே எனும் மலர் கொத்துகளை கொடுப்பது கௌரவமாக  எண்ணப்படுகிறது. ஆர்கிட் மலர் கொத்துகள் விஐபிகளுக்கு கொடுப்பதற்கென்றே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஜெரிபெரா, ஆந்தூரியம், கார்னேசன்,  லில்லியம் போன்ற மலர்கள் வணிக நோக்கில் பசுமைக்குடில்களில் வளர்க்கப்படுகின்றன.

உலர் மலர்கள், வாசனை எண்ணெய் மலர்கள்,அலங்கார மலர்கள்...
இந்த வகை மலர்கள் வணிக நோக்கில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. பெரிய நிலப்பகுதிகளை எழிலூட்டுவதற்கென்றே அலங்கார மலர்கள் தனியாக  உண்டு. அதனால் வீட்டுத் தோட்டத்தில் அவை பெரிய அளவில் வளர்க்கப்படுவதில்லை.

(விதை போடுவோம்)

நன்றி குங்குமம்தோழி

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL